மூன்று பேருந்துகள் மோதி விபத்து ; 29 பேர் படுகாயம்
காலி, இமதுவ-அங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள், இன்று (26) காலை 8:30 மணியளவில் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்தனர்.
இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தும் மோதிக்கொண்டன.
ஒரு பேருந்து நிறுத்தப்பட்டபோது, மற்றொரு பேருந்து அதன் பின்னால் இருந்து மோதியதால், சங்கிலித் தொடர்பற்று மோதிக்கொண்டுள்ளன.
காயமடைந்த 23 பயணிகள் இமதுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.