எமது கரங்களில் இரத்தம் படியவில்லை

எமது கரங்களில் இரத்தம் படியவில்லை

“நாம் தவறிழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, எதற்கும் அஞ்சப்போவதில்லை.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட பிறகு சிஐடிக்கு வந்திருந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , “ சனிக்கிழமையன்று கூட பொலிஸார் தற்போது தீயாக வேலை செய்கின்றனர் போலும். நல்லது. எம்மை கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை, பாதாள குழுக்களை ஒடுக்குவதிலும் பொலிஸார் காட்ட வேண்டும். மாறாக அரசியல் தேவைகளுக்காக சட்டத்தை அமுல்படுத்த முற்படக்கூடாது.

அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. நல்லாட்சிகாலத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயலாளராக இருந்தவரே தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார்.

தமது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே அவ்வப்போது கைதுகள் இடம்பெறுகின்றன. நாம் தவறிழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை.

எதற்கும் அச்சப்பட வேண்டியதும் இல்லை. நீதிமன்றத்தை நம்புகின்றோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சாரம் பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )