எமது பெற்றோரை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்

எமது பெற்றோரை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்

எமது பெற்றோரை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும். நாம் அடுத்தவர்களிடம் உள்ளாடை வாங்கி அணிவதில்லை. அரசியல் பழிவாங்கல் வேட்டை மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. என தேசிய மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , ” கிராம மட்டத்திலிருந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் எமது அரசியல் பிரச்சார பணி ஆரம்பமாகும். கிராம மட்டத்திலான எமது ஆதரவாளர்களுடன் முதலில் சந்தித்து நடத்தப்படும். அதன்பின்னர் அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும்.

முறைமை மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய பாதையிலேயே பயணிக்க தொடங்கியுள்ளனர். அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். அதன்மூலம் எமது அரசியல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அரசியல் பழிவாங்கல் வேட்டைக்கு முகங்கொடுத்து நாம் பழகிவிட்டோம். எம்மை சிறையில் அடைத்தாலும் கட்சியின் பணி தொடரும்.

எமது அம்மா, அப்பாவை எமக்கு பார்த்துக்கொள்ள முடியும். நாம் அயல்வீட்டார்களிடம் உள்ளாடை வாங்கி அணிவதில்லை. ஆனால் எம்மிடம் பாதுகாப்பு படை இல்லை. எனவே, முன்னாள் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பை அரசாங்கம்தான் வழங்க வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் உள்ள ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். அதனை மீறும் வகையில் செயல்பட முடியாது. எமக்கு எழுத்துமூலம் அறிவித்தால் வீட்டில் இருந்து வெளியேற முடியும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )