இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பான விசேட அறிவிப்பு

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பான விசேட அறிவிப்பு

இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும், நீதிமன்ற உத்தரவின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2005/38 ஆம் இலக்க நீதிமன்ற தீர்ப்பின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் இரவு நேர இசை நிகழ்ச்சிகள் குறித்து பொலிஸாரால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த சுற்றறிக்கையானது 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.

எதிர்வரும் காலங்களில், சுற்றுலாத் துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )