“தேர்தல்களை பிற்போடும் கோரிக்கையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை”

“தேர்தல்களை பிற்போடும் கோரிக்கையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை”

தேர்தல்களை பிற்போடும் எந்தவொரு கோரிக்கையினையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்றை பாராளுமன்றில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், கிளிநொச்சி – தர்மபுரம் வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், தேர்தலை பிற்போடும் யோசனை ஒன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரினாரா? என்பது தொடர்பில் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளதாக குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )