விடுதியொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
அவிசாவளை வித்யால மாவத்தையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை பொலிஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உயிரிழந்த இளைஞருக்கும் அதே விடுதியில் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை தங்கியிருந்த மற்ற இளைஞர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கொலையில் பலியானவர் சாமிமலை சூரியகந்த வத்த பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆவார்.
இறந்தவர் அவிசாவளை பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் வேலை பெற்று சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த தங்குமிடத்திற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka