சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
நாட்டின் 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினம் தொடர்பாக அவர் இன்று (30) கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , “முன்னதாக யாருக்காக சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன என்ற கேள்வி எங்களுக்கு இருந்தது. இந்த முறை, அரசாங்கம் அதை மக்களின் சுதந்திர தின கொண்டாட்டமாக அதிக பொதுமக்களின் பங்கேற்புடன் கொண்டாட முடிவு செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.