ஹபரணையில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் பலி
ஹபரணை, கல்வாங்குவா பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை-ஹபரணை வீதியில் இன்று முற்பகல் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.