கிண்ணத்தை வென்றது இந்திய மகளிர் அணி!
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து , 83 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 11.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
CATEGORIES Sports News