1,839 கிலோ கிராம் இஞ்சி தொகையுடன் நால்வர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் நேற்று (01) காலை கற்பிட்டி பொலிஸ் பிரிவில் கந்தகுடாவ கற்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 1,839 கிலோ கிராம் இஞ்சி தொகை மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மதுரங்குளி மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த 18, 34, 37 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka