🛑 Breaking News : நெல்லுக்கான உத்தரவாத விலை வெளியானது

🛑 Breaking News : நெல்லுக்கான உத்தரவாத விலை வெளியானது

நெல் சந்தையுடாக கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்த வேண்டிய உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிந்துள்ளது. 

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, 

அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்து கொண்டனர்.

அதன்படி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அறிவித்த விலைகளாவன,

நாடு நெல் கிலோகிராம் 120 ரூபாவுக்கு 

சம்பா நெல் கிலோகிராம் 125 ரூபாவுக்கு 

கீரி சம்பா நெல் கிலோகிராம் 132ரூபாவுக்கு வாங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும், அரிசியின்விலையையும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )