
டயானாவின் பிடியாணையை திரும்ப பெற உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயானா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆஜரானதையடுத்து, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை திரும்பப் பெற உத்தரவிட்டது.