
உப்பு தட்டுப்பாடு மேலும் தீவிரமாகும்
உப்பு இறக்குமதியானது சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்டப்டுள்ளது.
உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.