கார் வருவது தெரியாமல் ஓடிவந்த 5 வயது சிறுவன் : சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

கார் வருவது தெரியாமல் ஓடிவந்த 5 வயது சிறுவன் : சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கார் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் நாசிக்கில் உள்ள ஹோட்டல் எக்ஸ்பிரஸ் இன்னில் நடந்தது.

உயிரிழந்த சிறுவன் துருவ் தனது அப்பாவுடன் ஹோட்டல் பார்க்கில் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குப் பிறகு, சிறுவன் துருவ் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )