
பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மோதும் முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம்
தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.
இந்தத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
தெம்பா பவுமாதலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெற்றிருந்தார்.
இவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண தென்னாபிரிக்க அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடர் மற்றும் எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ண தொடர்களில் இருந்து ஜெரால்ட் கோட்ஸி விலகியுள்ளார்.
இடுப்பு வலி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
CATEGORIES Sports News
TAGS 1st Match at LahoreHot NewsPakistan Tri-Nation SeriesPakistan vs New ZealandSports NewsSri lankaTri-Nation