
பாஜக வசமானது டெல்லி : 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் ஆட்சியமைக்கிறது பாஜக
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ஆம் திகதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னனிலையில் உள்ளது.
மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 45 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களிலும் உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வரவில்லை.
டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி பின்னிலையில் உள்ளது.
தனித்து போட்டியிட்ட காங்கிரசும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் கண்டது.
தற்போது பாஜக வெற்றி பெற்றால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பாஜக வெற்றியை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாஜக கொடியை ஏந்தியவாறே சாலையில் ஆடிப்பாடி கட்சியின் வெற்றியை கொண்டாடினர்.
மேலும், பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வெற்றி முழக்கமிட்டனர்.