‘எல்ல ஒடிசி நானுஓயா’ தொடருந்து சேவை இன்று முதல் ஆரம்பம் !

‘எல்ல ஒடிசி நானுஓயா’ தொடருந்து சேவை இன்று முதல் ஆரம்பம் !

நானுஓயா மற்றும் பதுளை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான எல்ல ஒடிசி நானுஓயா என்ற புதிய ரயில் சேவை இன்று ஆரம்பமாகிறது.

தற்போதுள்ள சுற்றுலாப் பயணிகளின் தேவையின் அடிப்படையில் இந்த தொடருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த தொடருந்து செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் , இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )