ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டமைப்பினர் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க நடவடிக்கை !

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டமைப்பினர் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க நடவடிக்கை !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அம்பாறை மாவட்ட சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டமைப்பினர் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த காலங்களில் உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்களாக, உப தவிசாளர்களாக இருந்தவர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிராந்திய முக்கியஸ்தர்களையும் அம்பாறை தனியார் விடுதிக்கு இன்று அழைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை நிர்வாகிகள் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நிலைப்பாடு, தேர்தல் சாதக, பாதங்கள் சமகால அரசியல் முன்னெடுப்புகள், விவசாயி களினதும் ஏனைய தொழிலாளர் களினதும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )