
அங்கொடையில் தீ விபத்து
அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள ஒரு வீடு மற்றும் இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு அங்குள்ள மக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீ வேகமாக பரவியதால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போது, கோட்டை மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தீ விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.