
தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாதனையை முறியடிக்க முடியாது
ராஜபக்சக்களின் நாமத்தை உச்சரித்தால் தான் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என அரசாங்கம் கருதுகின்றது. தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாதனையை முறியடிக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஆளுங்கட்சியினர் ராஜபக்சக்கள், ராஜபக்சக்கள் என்றுதான் கூறிவருகின்றனர். ராஜபக்ச நாமம் இல்லாமல் அரசாங்கம் செயல்படாது போலும். மஹிந்த ராஜபக்சவை சூழுதான் கிராமிய மக்கள் சக்தி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியும். அதனால்தான் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
மதிப்பீட்டு திணைக்களத்தின் மதீப்பீட்டுக்கமையவே வீடுகளை இழந்த அரசியல்வாதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டு திணைக்களம் தான் மஹிந்த ராஜபக்ச வாழ்ந்த வீட்டை மதிப்பீடு செய்துள்ளது.
மஹிந்த வீடு தொடர்பான மதிப்பு சரியென்றும், ஏனையவை அதிகம் என்றும் எப்படி கூறமுடியும்?
சட்டமா அதிபர் விடயத்திலும் இப்படிதான் நடக்கின்றது.
ராஜபக்சக்களை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கினால் சட்டமா அதிபர் நல்லவர், சாட்சி இல்லை எனக் கூறினால் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.