
வியட்நாம் தூதுவருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகப் பேணி வருவதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சபைத் தலைவர் அலுவலகத்தில், சபைத் தலைவரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மற்றும் வியட்நாம் தூதர் டிரின் தாய் டாம் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்று தூதர் கூறினார்.
அதனைதொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 95வது ஆண்டு விழாவில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்றதை மிகவும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வியட்நாமின் துணைத் தூதர் லீ வான் ஹாங்கும் பங்கேற்றார்