
ஹஜ் யாத்திரையில் இனி குழந்தைகளுக்கு அனுமதியில்லை
பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு நாட்டுக்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு ஆண்டுதோறும் ஹஜ் பயணத்திற்கான அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
முதல் முறையாக யாத்திரையில் பங்கேற்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.