நெல் சந்தைப்படுத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

நெல் சந்தைப்படுத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

இந்த சட்டத்தின் மூலம் நெல் மற்றும் அரிசிக் கொள்வனவின் போது, விற்பனை செய்தல், விநியோகித்தல், குற்றுதல், சூடுமிதித்தல் மற்றும் அவ்வாறான செயலாக்கங்களை வியாபாரங்களாக நடத்திச் செல்வதற்காக சபையொன்றைத் தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் அதற்குரிய சேவைகளை வழங்குதல் தொடர்பான விடயங்களுக்கான சட்டரீதியான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. 

குறித்த சட்டம் விதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 54 ஆண்டுகளாயினும், அதற்கான எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல், இற்றைப்படுத்தப்படாத சட்டமாக நடைமுறையிலுள்ளது. 

குறித்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமையால், தற்போது அடையாளங் காணப்பட்டுள்ள பிரச்சினையான, முறைசாரா வகையில் நெல் மற்றும் அரிசி இருப்புக்களைச் சேகரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்தலை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக அனுமதிப்பத்திர முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக சட்டத்திலுள்ள குறித்த ஏற்பாடுகளைத் துரிதமாகத் திருத்தம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )