மகா கும்பமேளாவுக்கு சென்ற கார் பேருந்துடன் மோதி விபத்து – 10 பேர் பலி!

மகா கும்பமேளாவுக்கு சென்ற கார் பேருந்துடன் மோதி விபத்து – 10 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்ற கார் ஒன்று எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் .

நேற்று இரவு மிர்சாபூர் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலிஸாரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )