பார்க்கிங் டிக்கெட் :  முதல் 10 நிமிடம் இலவசம் !

பார்க்கிங் டிக்கெட் : முதல் 10 நிமிடம் இலவசம் !

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் அதிகமாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும்.

மேலும், பொது வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்திய வாகன சாரதிகளுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.

எனவே, பொது வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்திய உடனேயே கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

மேலும், பௌர்ணமி மற்றும் விசேட விடுமுறை நாட்களில் பொது வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )