மின் கட்டணம் குறைகிறது

மின் கட்டணம் குறைகிறது

மின்சார கட்டணத்தை ஜூலை முதலாம் திகதி முதல் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாவிருந்து 6 ரூபாவாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாவிருந்து 9 ரூபாவாகவும், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாவிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிருந்து 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )