நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்

நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (07) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக 2023ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களின் ஊடாக பாடசாலைகளில் அத்தியாவசியமான சீரமைப்புப் பணிகளை அரசாங்கம் சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாக அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களாக விடுபட்ட கல்வி நிர்வாக சேவை தரம் 3 தகுதி அடிப்படையிலான நியமன நடவடிக்கைகள் அனைத்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளில் நிறுத்தப்பட்ட அனைத்து பாடசாலை விளையாட்டுகளும் வருடாந்தம் மீண்டும் நடாத்தப்பட்டு விடுபட்ட அனைத்து விளையாட்டுகளும் நடாத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், கல்விப் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் பாடசாலைக்குள் தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கையும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )