பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி !

பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி !

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை மூன்று மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், பொலிஸ் தரப்பு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)