
பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களை இடையே ஒரு சமநிலையை பராமரிக்க முடியுமா ? ; கலாநிதி ஜனகன் கேள்வி
பாராளுமன்றத்தில் நேற்று (17) சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
குறித்த பதிவில் ”இம்முறை பட்ஜெட்டின் மீது எனக்குள்ள மிகப்பெரிய கேள்வி, இந்த அரசு, நிதி ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களை இடையே ஒரு சமநிலையை பராமரிக்க முடியுமா? என்பது தான்.
• வரி உயர்வு மற்றும் அரசுத் செலவுகளை சரியாக நிர்வகிக்காதபட்சத்தில், விலைவாசி உயர்வு (Inflation), முதலீட்டு நம்பிக்கை குறைவு, பொருளாதார வளர்ச்சி மந்தமாக செல்லும் அபாயம் உள்ளது.
• IMF விதிகளை பின்பற்றுவது முக்கியம், ஆனால் அதே நேரத்தில் மக்கள் மீது அதிக சுமை இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை சரியாக வழிநடத்த வேண்டிய கடமை இந்த அரசிடம் உள்ளது.” என பதிவிட்டுள்ளார்.