இந்திய தூதுவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு

இந்திய தூதுவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நேற்று (10) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் .

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

அதேபோல் பெருந்தோட்ட பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக, ஜீவன் தொண்டமான், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கினங்க இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3 பில்லியன் ரூபாய் நிதி உதவியிற்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை தற்போதைய அரசாங்கத்தினூடாக மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க கடந்த வருடம் எமது நாடு பொருளாதார நெருக்கடியில் காணப்பட்டபோதும், சமீபத்திய வளர்ச்சிக்காகவும், வழங்கிய ஆதரவிற்கும் இந்தியா அரசாங்கத்திற்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )