
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் ரயில் வீதி பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 22 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த நபருக்கு நேற்றிரவு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மனைவியுடன் புளூமெண்டல் ரயில் வீதிக்கு அருகில் சென்ற போது அங்கிருந்த சிலர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த சிலர் கூரிய ஆயதத்தினால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.