நியூசிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

இலங்கை மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதன்படி குறித்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமரி அத்தபத்து தலைமையிலான குறித்த குழாமில் ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, மனுதி நாணயக்கார, இமேஷா துலானி, அச்சினி குலசூரிய, உதேசிகா பிரபோதனி, சச்சினி நிசன்சலா, கெளசானி நுத்யங்கனா, இனோசி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, ரஷ்மிகா செவ்வந்தி மற்றும் சேத்தனா விமுக்தி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )