
இளநீரின் விலை சடுதியாக உயர்வு
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு இளநீரின் விலை இந்த நாட்களில் 300 ரூபாவைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறிய அளவிலான ஒரு இளநீரின் விலை 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீருக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கான காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka