![தற்போதைய சந்தை விலையை விட அரிசியை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவோம் தற்போதைய சந்தை விலையை விட அரிசியை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவோம்](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/37-3.jpg)
தற்போதைய சந்தை விலையை விட அரிசியை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவோம்
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாயம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “நாங்களும் இதைப் பொறுப்புடன் சொல்கிறோம். நாங்கள் விவசாயிக்கு இங்கு மிகவும் நியாயமான விலையைக் கொடுத்துள்ளோம்.
அதேபோல அரசின் களஞ்சியசாலைகளுக்கு கொள்வனவு செய்யும் நெல், தங்களின் ஆட்சிக்காலத்தில் செய்தது போல இவற்றைச் செய்து குறைந்த விலையில் விலங்கு உணவு லேபலின் கீழ் நாம் விற்பனை செய்யவில்லை.
அந்த அனைத்து நெல்லும் அரிசியாக அரைக்கப்பட்டு தற்போதைய விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. நிச்சயமாக, அவர்கள் விவசாயிகளிடமிருந்து அந்த விலைக்கு நெல்லையும் வாங்குவார்கள்.
தற்போதைய விலையை விடக் குறைந்த விலையில் நாம் நிச்சயமாக அரசாங்கத்தின் அரிசியாக அரிசியும் வழங்குவோம் என்பதை இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.