இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டம் ஆரம்பம்

இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டம் ஆரம்பம்

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட நீர் மின் சேமிப்பு திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மொத்தம் 600 மெகாவோட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின் கட்டமைப்பிற்குள் வழங்கும்.

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் இலக்கை அடைவதில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் இணைக்கும் பாரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நாட்டின் பயணத்தில் எரிவாயு வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் என்ற இலக்கை அடையும் என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.  

அதேபோல் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு திட்டத்தின் நிதி வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு குறைந்த விலையை உறுதி செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நீண்டகால நிதியைப் பெறுவதே இதன் நோக்கம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த திட்டத்தின் ஊடாக எரிசக்தி சுதந்திரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உறிஞ்சுவதற்கான அமைப்பு ஆதரவு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)