
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் இராஜினாமா
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் இராஜினாமா செய்துள்ளார்.
இவர் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.