
இரு குழுக்கள் இடையே மோதல் – சகோதரர்கள் இருவர் பலி
பத்தேகம பகுதியிலா் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று(27) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பத்தேகம – மத்தேவில பகுதியில் இறுதிச்சடங்கொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மோதலின் போது மேலும் இருவர் படுகாயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
