குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட நபர்
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய எல்லாளன் என அழைக்கப்படுகின்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா மரியஜேசுதாசன் எனத் தெரியவருகிறது.
மேலும் குறித்த நபர் நேற்றைய தினம் (17) வயல் நிலத்திற்குச் சென்று தனது உயிரை மாய்த்துக்கெண்ட நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்திற்குள் ஒரு வாரத்திற்கு மேலாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்