மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 31 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றது.

இதற்கமைய 93 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 21.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )