ரஷ்யா டஜஸ்தானி தேவாலயங்கள், பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு !

ரஷ்யா டஜஸ்தானி தேவாலயங்கள், பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் – 20 பேர் உயிரிழப்பு !

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் குடியரசான டஜஸ்தானில் உள்ள பொலிஸ்
சோதனைச் சாவடிகள், தேவாலயங்கள் மற்றும் யூத ஆலயம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

டெர்பன்ட் மற்றும் மகச்காலா நகரங்களை இலக்கு வைத்து பெந்தகொஸ்தே பண்டிகையின்போது ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அமைப்பு பற்றி தமக்கு தெரியவந்திருப்பதாக அந்தக் குடியரசின் தலைவர் செர்கெய் மலிகொவ் குறிப்பிட்டபோதும் அது தொடர்பில் விபரங்களை வெளியிடவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் இரு தேவாலயங்கள் மற்றும் ஒரு யூத ஆலயம் இலக்கு வைக்கப்பட்டிருப்பதோடு டஜஸ்தானின் மிகப்பெரிய நகரான மகச்காலாவில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று
தாக்கப்பட்டுள்ளது.

டஜஸ்தான் ரஷ்யாவின் வறிய பகுதிகளில் ஒன்று என்பதுடன் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட குடியரசாக இது அமைந்துள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )