தைவான் அரசாங்கம் எச்சரிக்கை

தைவான் அரசாங்கம் எச்சரிக்கை

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து  தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது.

மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹாங்காங், மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தைவான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வருகின்றனர். எனவே இரு நாடுகள் இடையே தினமும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )