கரையொதுங்கிய மீனவரின் சடலம்!
யாழ்ப்பாணம், வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று (05) கரை ஒதுங்கியுள்ளது.
வேலனை – துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.