யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் !

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் !

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார நேற்றையதினம் (05) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்றையதினம் (05) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதுவரை யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ஜகத் விசாந்த பிரதிபிற்கு பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டமையால் அவருடைய பதவிநிலைக்கு சூரிய பண்டார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )