உக்ரைன் நகரங்களில் சரமாரிதாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு
உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா நேற்று (08) நடத்திய சரமாரி
ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருப்ப
தோடு தலைநகர் கீவில் சிறுவர் மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்டதில்
பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
பகல் நேரத்தில் அரிதாக இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கீவில்
குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் ஒல்மன்டிட் சிறுவர் மருத்துவமனை சேதமடைந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று மத்திய உக்ரைன் நகரான கிர்ரியிரியில் இடம்பெற்ற
தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு
கிழக்கு நகரான கொக்ரேஸ்கில் மூவரும் டிப்ரோவில் ஒருவரும்
கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு போலந்து
சென்றிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி,
பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யா விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் ரஷ்யா தரப்பில் இருந்து உடன் எந்த
பதிவுலும் அளிக்கப்படவில்லை.