அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஜனாதிபதிகள் மூவர் படுகொலை !

அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஜனாதிபதிகள் மூவர் படுகொலை !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்காகப் பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்த ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள போதிலும், அமெரிக்காவில் இதுபோல ஜனாதிபதி அல்லது ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை.

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெறவிருக்கின்றது.

ஏற்கனவே பலமுறை இதுபோன்ற தாக்குதல்கள் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளன.

1981 ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்தார்.

ரீகன் வோஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.

அங்கிருந்து புறப்படும் போது அவர் மீது ஜோன் ஹிங்க்லி ஜூனியர் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

Left: Ronald W Reagan Right: John W Hinckley

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ரீகன் 12 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரது செல்வாக்கு அதிகரித்தது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஜோன் ஹிங்க்லி ஜூனியருக்கு கடந்த 2022இல்
பிணை வழங்கப்பட்டது.

ஜெரால்ட் ஃபோர்ட் 1975 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தார்.

கடந்த 1975 செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் அவரை பெண்கள் அமைப்பினர் சிலர் கொலை செய்ய முயன்றனர்.

Left: Gerald R Ford Middle: Lynette Alice Fromme Right: Sara Jane Moore

17 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை அவர் மீது கொலை முயற்சி நடந்தது.

இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர் இரண்டு சம்பவங்களில் இருந்தும் எந்தவொரு
காயமும் இல்லாமல் உயிர்தப்பினார்.

ஜோர்ஜ் வோலஸ் 1972 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மேரிலாந்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு
நடந்த நிலையில், அவர் படுகாயமடைந்தார்.

Left: George C Wallace Right: Arthur Bremer

இதனால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டி இருந்தது.

பிரிவினைவாத சித்தாந்தம் கொண்ட நபரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரொபர்ட் எஃப்.கென்னடி என்பவர் 1968 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய ஜோன்
எஃப். கென்னடியின் சகோதரான ரொபர்ட் எஃப். கென்னடி, கலிஃபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பா சிடர் ஹோட்டலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Left: Robert F Kennedy Right: Sirhan Sirhan

கறுப்பினத்தவர்கள் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர் மார்ட்டின்
லூதர் கிங் ஜூனியர் கொல்லப்பட்ட இரண்டே மாதங்களில் இந்தப் படுகொலை நடந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதற்கு முன்னதாக ஜோன் எஃப். கென்னடி 1963 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

அமெரிக்கா வரலாற்றில் நடந்த மிக மோசமான ப டுகொலை என்றால் அது
ஜோன் எஃப். கென்னடி படுகொலை சம்பவம்தான்.

மனைவி ஜாக்கியுடன் வாகன பேரணியில் சென்ற ஜனாதிபதி
கென்னடி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சோவியத் யூனியனில் வசித்த முன்னாள் கடற்படை வீரர் லீ ஹார்வி
ஓஸ்வால்ட் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணை
முடிக்கப்பட்டது.

Left: John F Kennedy Right: Lee Harvey Oswald

அமெரிக்க அரசியலில் வன்முறை கால கட்டத்தைத் தொடங்கிய படுகொலை இது என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.

பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மீது 1933 ஆம் ஆண்டு படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Left: Franklin D Roosevelt Right: Giuseppe Zangara

ஜனாதிபதித் தேர்தலில் வென்ற ரூஸ்வெல்ட் மீது புளோரிடாவின் மியாமியில் படுகொலை முயற்சி சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவத்தில் அவர் காயமடையவில்லை, இருப்பி
னும், சிகாகோ மேயர் அன்டன் செர்மாக் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தியோடர் ரூஸ்வெல்ட் 1912 ஆம் ஆண்டு ட்ரம்பைப் போலவே, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மீது விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் துப்பாக்கிக் குண்டு அவரது மார்பில் பாய்ந்துள்ளது.

Left: Theodore Roosevelt Right: John Schrank

இதில் அவர் உயிர் பிழைத்த போதிலும், தனது வாழ்நாள் முழுவதும் அவரது மார்பில்
தோட்டா இருந்தது. மேல் பொக்கெட்டில் அவர் வைத் திருந்த 50 பக்க கடதாசி மற்றும் கண்ணாடிதான் அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளது.

வில்லியம் மெக்கின்லி 1901 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த போது நியூ
யோர்க்கில் உள்ள பஃபேலோ பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

Left: William McKinley, Right: Leon F Czolgosz

அமெரிக்க அதிபர் படுகொலை செய்யப்பட்டது அது இரண்டாவது முறையாக இருந்தது.

ஆபிரகாம் லிங்கன் 1865 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலை அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஜனாதிபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாக அந்தக் கொலை அமைந்தது.

வோஷிங்டனில் உள்ள ஃபோர்ட் தியேட்டரில் நாடகத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தபோது,ஜோன் வில்க்ஸ் பூத் என்பவர் லிங்கனை படுகொலை செய்தார்.

Left: Abraham Lincoln. Right: John Wilkes Booth


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )