ஐ.ம.ச புதிய தவிசாளராக கபீர் ஹாசீம் நியமனம் !

ஐ.ம.ச புதிய தவிசாளராக கபீர் ஹாசீம் நியமனம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசீமை நியமிப்பற்கு தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கட்சியின் தவிசாளர் சரத்பொன்சேக்காவுக்குமிடையிலான முறுகல் நிலையின் உச்சக்கட்டமாக
சரத் பொன்சேக்காவை கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிய
பின்னர் கபீர் ஹாசீமை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

அதேவேளை, சரத் பொன்சேக்கா வகித்து வரும் களனி தொகுதி அமைப்பாளர் பதவிக்கு
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளிலிருந்தும் முன்னாள் இரா
ணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நீக்கப்படவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )