தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்?

தூக்கத்தில் பேசுபவரா நீங்கள்?

தூங்கிக்கொண்டு இருக்கும் போது திடீரென ஒரு சிலர் முணுமுணுக்கத் தொடங்குவார்கள் அல்லது சிரிப்பார்கள். அதற்கு ஒரு படி மேலே சென்று எழும்பி நடக்கவும் ஆரம்பிப்பார்கள்.

இதற்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது அல்லது காத்து கருப்பு அண்டியிருக்கிறது என நினைப்போம்.

உண்மையில் அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

யார் தூக்கத்தில் பேசுவார்கள்?

பெரும்பாலும் 3 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தூக்கத்தில் பேசுவார்கள்.

எதனால், தூக்கத்தில் பேசும் பழக்கம் ஏற்படுகிறது?

இதற்கான சரியான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சில நேரங்களில் இது கனவுடன் தொடர்பானதாக இருக்கலாம்.

அல்லது உடல் நலக்கோளாறு, மன அழுத்தம், போதைப் பொருள் பாவனை போன்றவற்றின் காரணமாகவும் தூக்கத்தில் பேசும் பழக்கம் உண்டாகிறது.

சில சமயங்களில் ‘ஸ்லீப் பிஹேவியர் டிஸார்டர்’ அல்லது ‘நாக்டர்னல் ஸ்லீப் ரிலேட்டட் ஈட்டிங் டிஸார்டர்; போன்ற தூக்க கோளாறுகள் காரணமாகவும் இது ஏற்படலாம்.

இதை தடுப்பதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா?

இதற்கு பெரும்பாலும் சிகிச்சைகள் தேவையில்லை. இருப்பினும் இந்த பழக்கமானது உங்களது தூக்கத்தை பாதித்தால், நிபுணரை அணுகுவது நல்லது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )