வெற்றிலை உண்ணும் பழக்கம் உள்ளதா?
பழங்கால மனிதர்களில் பெரும்பாலானோருக்கு வெற்றிலை, பாக்கு போடாமல் இருக்க முடியாது.
உணவுச் செரிமானத்துக்கு வெற்றிலை உதவும் என்பது அவர்களின் நம்பிக்கை.
வெற்றிலையில் 84.4 சதவீதம் நீர்ச்சத்தும் 3.1 சதவீதம் புரதச் சத்தும் 0.8 சதவீதம் கொழுப்புச் சத்தும், கரோட்டின், கல்சியம், தயமின், ரிபோபிளேவின், விட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன.
மேலும் அண்மையில் நடந்த ஆய்வொன்றில் வெற்றிலையில் தீவிரமான நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நம் உடலில் காணப்படும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அதிகரிக்கவும் கூடாது குறையவும் கூடாது. எனவே வெற்றிலை போடுவது கபம் சேர்வதைத் தடுக்கும்.
தொடர்ந்து, தலையில் நீர் கோர்த்துக்கொள்ளல், ஆஸ்துமா ஆகிய பிரச்சினைகளுக்கும் வெற்றிலை மருந்தாக செயல்படுவதோடு, எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது.
அதுமட்டுமின்றி வெற்றிலை போடுவது சில வகையான தைரொய்ட் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.