சமூக வலைத்தளங்களூடாக நடக்கும் பிரசாரத்தை தடுக்க வேலைத்திட்டம் !

சமூக வலைத்தளங்களூடாக நடக்கும் பிரசாரத்தை தடுக்க வேலைத்திட்டம் !

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் சமூக வலைதளங்களூடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுப்பதற்கு விசேட
வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான காலத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்பதை சட்டம் உறுதி செய்வதாகவும், ஆனால், சிலர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

எனவே, அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடக பிரசாரங்கள் தொடர்பாக எவ்வாறு
செயற்படுவது என்பது குறித்துசம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )