அனுராதபுர மாவட்ட தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமனம் !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தின் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா காலி மாவட்டத்தின் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.